அணுமின் நிலையத்தை மூடக்கோரி நெல்லை, தூத்துக்குடி மீனவர்கள் ஸ்டிரைக்
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரியும், போராட்டக் குழுவினர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்க தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து அங்கு 10,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்றே 300 ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். அங்கு முன்னேற்பாடாக 49 பெண்கள் உள்பட 186 போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். இன்று ரஷ்ய விஞ்ஞானிகள் 96 பேர் உள்பட 950 ஊழியர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அணுமின் நிலையத்திற்கு பணிக்கு சென்றனர்.
இந்நிலையில் அணுமின் நிலையத்தை மூடக் கோரியும், போராட்டக் குழுவினர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நெல்லை மாவட்டத்தில் பெருமணல், கூட்டப்புளி, இடிந்தகரை, தொம்மையர்புரம், உவரி, கூடுதழை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், அமலிநகர், புன்னைகாயல், கொம்புதுறை, சிங்கித்துறை, வீரபாண்டியன்பட்டினம், ஆலந்தலை, மணப்பாடு, பெரியதாழை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும் இன்று கடலு்ககு மீன்பிடிக்கச் செல்லவில்லை. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் அனைவரும் இடிந்தகரை போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். மீனவர்கள் போராட்டம் காரணமாக கடற்கரை கிராமங்கள் அனைத்திலும் பதட்டம் நிலவுகிறது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications