கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம்: முதல்வர் ஜெயலலிதாவுக்கு சரத்குமார் பாராட்டு

Subscribe to Oneindia Tamil

Sarath Kumar
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதை சமத்துவ மக்கள் கட்சி வரவேற்கிறது.

கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து மத்திய அரசும், தமிழக அரசும் நியமித்த குழுக்கள் ஆய்வு மேற்கொண்டு அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று அறிக்கைகள் சமர்ப்பித்துள்ளன.

கூடங்குளம் பகுதி மக்களின் நல்வாழ்விற்கும், வாழ்வாதார மேம்பாட்டிற்கும் மாநில அரசின் சார்பில் ரூ.500 கோடி நிதியை ஒதுக்கி, மீனவர்களின் விசைப்படகுகளை பழுது பார்க்கும் நிலையம் அமைத்தல், மீன்களைப் பாதுகாக்க குளிர்பதனக் கிடங்குகள் அமைத்தல், வீட்டு வசதி, சாலைகள் மேம்பாடு உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித் தர முன் வந்திருப்பது தமிழக மக்கள் நலனில் முதல்வர் ஜெயலலிதா கொண்டுள்ள உண்மையான அன்பையும், அக்கறையையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.

போராட்டக் குழுவினர் விடுத்திருக்கும் வேண்டுகோளின்படி அப்பகுதி மக்களுக்கு பேரிடர் நேரத்தில் இடப்பெயர்ச்சி உள்ளிட்ட பாதுகாப்பு குறித்த பயிற்சியை வழங்க மத்திய அரசு உடனே ஆவன செய்ய வேண்டும்.

தமிழகத்தின் தொழில், விவசாயம், கல்வித்துறைகளில் மின்வெட்டால் ஏற்பட்டு வரும் பாதிப்புகளை நிவர்த்தி செய்யும் வகையில் முதல்வர் ஜெயலலிதா நல்ல முடிவை எடுத்துள்ளார். அவர் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ள உதயகுமாரின் போராட்டக் குழுவினர் அரசின் நிலைக்கு ஆதரவு தர வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+