For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாவோயிஸ்டுகளிடம் இருந்து இத்தாலியர்களை விடுவிக்க தூதராக செல்ல தயார்: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

By Mathi
Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ஒரிசா மாநிலத்தில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டுள்ள இரண்டு இத்தாலியர்களை விடுவிப்பது தொடர்பாக மாவோயிஸ்டுகளுடன் பேச்சு நடத்த தூதராக செல்ல தயாராக இருப்பதாக வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொட்ரபாக அவர் கூறியுள்ளதாவது:

நக்சல்களும் அரசுத் தரப்பும் கேட்டுக் கொண்டால் கடத்தப்பட்ட இத்தாலியர்களை விடுவிக்கும் விவகாரத்தில் தூதராக செல்ல தயராக இருக்கிறேன்.

நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அடிப்படை வசதிகளும் கல்வியும் ஆன்மீகமும் போதிக்கப்பட வேண்டியது அவசியம்.

நக்சல்கள் பிடியிலிருந்து விடுபட கல்வியும் ஆன்மீகமும் அவசியமானது.

அரசியல் நுழைவா?

நான் அரசியலில் ஈடுபடப் போவதாக செய்திகள் வெளியாகின்றன. அரசியல் என்னுடைய துறை அல்ல. நான் மறுமலர்ச்சிக்காக பாடுபடுகிறவன். அரசியலில் இணையும் எண்ணம் இல்லை.

சட்டப்பேரவையில் ஆபாசப் படம் பார்க்கிற அரசியல்தான் இன்றைய நிலைமை. தற்போதைய அரசியலுக்கு சில உயர்ந்த குணாம்சங்கள் தேவைப்படுகிறது என்றார் அவர்.

English summary
Spiritual Guru Sri Sri Ravi Shankar has offered to negotiate between Maoists and the government in the issue of abduction of two Italians by Naxals in Odisha. He said that he is always ready for peace-talks anywhere and in the recent case of kidnapping of the foreigners by Naxals, he was prepared for mediation if either of the two sides (Naxals and the government) approached him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X