சங்கரன்கோவில்: தேமுதிகவுக்கு 2006 தேர்தலை விட இடைத் தேர்தலில் கூடுதல் ஓட்டு!

சங்கரன்கோவிலுக்கு நடந்த இடைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. 2வது இடம் திமுகவுக்கும், 3வது இடம் மதிமுகவுக்கும் கிடைத்தது. தேமுதிக வேட்பாளர் முத்துக்குமாருக்கு 4வது இடமே கிடைத்தது. அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வியைத் தவிர அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட்டைப் பறி கொடுத்தனர்.
ஆனால் தேமுதிகவின் படு தோல்வியிலும் ஒரு வெளிச்சப் புள்ளியைக் காணலாம். அது, இத்தொகுதியில் கடந்த முறை வாங்கியதை விட அதிக அளவிலான வாக்குகளை அக்கட்சி வேட்பாளர் பெற்றிருப்பது.
2011ல் நடந்த பொதுத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது தேமுதிக. இதனால் சங்கரன்கோவில் தொகுதி அக்கட்சிக்குக் கிடைக்கவில்லை. ஆனால் 2006ல் அக்கட்சி முதல் முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டபோது தமிழகம் முழுவதும் தனித்து களம் கண்டது.
சங்கரன்கோவிலில் முத்துக்குமார்தான் அப்போதும் போட்டியிட்டார். அத்தேர்தலில் முத்துக்குமாருக்குக் கிடைத்த ஓட்டு 5531 ஆகும். அத்தேர்தலில் தேமுதிகவுக்கு 5வது இடமே கிடைத்தது. முதலிடத்தை அதிமுகவும், 2வது இடத்தை திமுகவும் பெற்றன. 3வது இடம் பகுஜன் சமாஜுக்கும், 4வது இடம் பார்வர்ட் பிளாக்குக்கும் கிடைத்தன.
ஆனால் தற்போது நடந்த இடைத் தேர்தலில் முத்துக்குமார் ரொம்பவே முன்னேறியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் 12,144 ஆகும். அத்தோடு இந்த முறை 4வது இடத்திற்கும் முன்னேறியுள்ளார். இது நிச்சயம் நல்ல விஷயம்தானே...
கடந்த தேர்தலை விட மிக அதிக அளவிலான வாக்குகளை தேமுதிக இங்கு பெற்றிருப்பது நிச்சயம் கவனிப்புக்குரியதாகும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications