கணவரின் சொத்தில் மனைவிக்கு உரிமை: சட்டமசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: திருமண வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டு இணைந்து வாழப்பிடிக்காமல் உள்ள தம்பதிகள் விரைவில் விவாகரத்து பெறும் புதிய சட்ட மசோதா கொண்டு வரப்படுகிறது. இதற்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
திருமண சட்டதிருத்த மசோதா கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த மசோதா பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதை பரீசிலித்த நிலைக்குழு, இந்த மசோதாவில் நான்கு திருத்தங்களை செய்யும்படி பரிந்துரை செய்தது. இதனையடுத்து இந்த மசோதாவை மாற்றியமைக்க வெள்ளிக்கிழமை கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
திருமண சட்ட திருத்த மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள்:
பரஸ்பரம் விவாகரத்து கோரி விண்ணப்பம் செய்யும் தம்பதிகள் குறைந்த பட்சம் ஆறு முதல் 18 மாதங்கள் வரை விவாகரத்து கிடைக்க காத்திருக்க வேண்டும். இனி அவ்வாறு காத்திருக்க தேவையில்லை. புதிய சட்ட திருத்த மசோதாவில் இனி சேர்ந்து வாழவே முடியாத திருமணம் என்ற புதிய விதிமுறை, சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால், பிரிந்தவர்கள் விரைவில் விவாகரத்து பெற்றுவிட முடியும். இனி அவர்கள் ஒன்று சேர வாய்ப்பே இல்லை என்று நீதிமன்றம் தீர்மானிக்கும் பட்சத்தில் உடனடியாக விவாகரத்து வழங்கலாம்.
இதேபோல் சேரவே முடியாது என்ற பிரிவில் கணவன் விவாகரத்து கேட்டால் அதை எதிர்க்க மனைவிக்கு உரிமை உண்டு. ஆனால் இதே காரணத்திற்காக மனைவி விவாகரத்து கேட்டால் அதை எதிர்க்க கணவருக்கு உரிமை இல்லை.
திருமணத்திற்குப் பின்னர் கணவர் வாங்கும் சொத்தில் மனைவிக்கு உரிமை. விவாகரத்து பெற்ற பின்னர் பெற்ற பிள்ளைக்கு உள்ள உரிமையைப் போல தத்து எடுக்கும் பிள்ளைக்கும் உரிமை அளிப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதால் விரைவில் இந்த சட்டம் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications