கோவில்பட்டியில் பதட்டம்- மார்க்கிஸ்ட் நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு
கோவில்பட்டி: கோவில்பட்டியில் இன்று அதிகாலை மார்க்சிஸ்ட் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் வசித்து வருபவர் சீனிவாசன். இவர் மார்க்கிஸ்ட் நகர செயலாளராக உள்ளார். இவரது மனைவி குமுதம். இவர்களுக்கு நந்தா, தெரசா ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் திடீரென்று சீனிவாசன் வீட்டின் முன் வெடிகுண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டது. இதனால் சீனிவாசன் குடும்பத்தினர் அலறி அடித்து ஓடி வந்தனர். அப்போது 2 பெட்ரோல் குண்டுகள் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை பார்த்தனர். குண்டு வீசியவர்களை தேடி பார்த்தனர். அதற்குள் அவர்கள் ஓடி விட்டனர். இதை தொடர்ந்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
டிஎஸ்பி சிலம்பரசன், கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகேசன், மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அவர்கள் வீட்டின் முன் சிதறி கிடந்த பெட்ரோல் குண்டுகளின் பாகங்களை எடுத்துச் சென்றனர்.
மார்க்கிஸ்ட் செயலாளர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் கடந்த ஜனவரி மாதம் தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது நினைவிருக்கலாம்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications