தெலுங்கானா விவகாரம்: நாடாளுமன்ற மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
டெல்லி: தெலுங்கானா தனிமாநில கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திர மாநில எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் அலுவல் ஏதுமின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இன்று காலை அவை கூடியதும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, தெலுங்குதேசம் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தெலுங்கானா விவகாரம் தொடர்பாக முழக்கங்களை எழுப்பினர்.
அமளிக்கிடையே பேசிய பாஜக தலைவர் சுஸ்மா ஸ்வராஜ், இந்த அவையில் பிரதமர் இருக்கிறார். அவை முன்னவரும் இருக்கின்றார். தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்படுமா? இல்லையா? அல்லது தெலுங்கானா உருவாக்கப்படாது எனில் போராட்டக்காரர்களுடன் பேசுவீர்களா? தொடர்ந்து தீக்குளிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் குறைந்தபட்சம் தெலுங்கானா போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தையாவது அரசு நடத்துமா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
ஆனால் தொடர்ந்தும் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி 3 கட்சி எம்.பிக்களும் முழக்கங்களை எழுப்பியதால் அவை நடவடிக்கைகளை பிற்பகல் 2 மணி வரை சபாநாயகர் மீரா குமார் ஒத்திவைத்தார்.
பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியபோதும் இதே நிலைமை நீடித்தது. சபாநாயகர் இருக்கையில் இருந்த துணைத் தலைவர் கரிய முண்டா அவை நடவடிக்கைகளை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications