உத்தரப் பிரதேசத்தில் கணவனை கொன்று பாத்ரூமில் புதைத்த பெண்
மீருட்: உத்தர பிரதேச மாநிலத்தில் கணவரைக் கொன்று பாத்ரூமில் புதைத்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர பட்டேல்(40). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். அவரது மனைவி வர்ஷா(28). வர்ஷா தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 2002ம் ஆண்டு பட்டேலை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பட்டேல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்று தனது குடும்பத்தாருடன் மீருட்டில் செட்டிலானார்.
இந்நிலையில் வர்ஷா கடந்த ஞாயிற்றுக் கிழமை தனது கணவரைக் கொன்று பாத்ரூமில் புதைத்து தரையை பூசிவிட்டார். நேற்று பட்டேலின் நண்பர் ராஜேந்திர குமார் என்பவர் அவர்கள் வீட்டுக்கு சென்றார். அப்போது அவர் பாத்ரூம் தரை புதுசாக பூசப்பட்டிருப்பதைப் பார்த்தார். வர்ஷாவிடம் தனது நண்பர் எங்கே என்று கேட்டார். அதற்கு அவர் சரியாக பதில் கூறாததால் சந்தேகமடைந்த குமார் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார் வர்ஷாவைப் பிடித்து விசாரித்ததில் அவர் தனது கணவரைக் கொன்று பாத்ரூமில் புதைத்துவிட்டதாகக் கூறினார். தரையைத் தோண்டி பார்த்தபோது பட்டேலின் சடலம் கிடைத்தது.
கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் வர்ஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications