தமிழகம் முழுவதும் 2 நாட்கள் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவுடனும், கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் நல்லாசியுடனும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அதிமுக அரசால், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2012-2013-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் நலன் குறித்த பல்வேறு சிறப்பு அம்சங்களை நாட்டு மக்களுக்கு விளக்கிடும் வகையில், கழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டங்கள்'' 31.3.2012, 1.4.2012 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற உள்ளன.
பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள் மற்றும் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோரின் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கழக சட்டமன்ற உறுப்பினர்கள், தத்தமது சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மாவட்ட கழகச்செயலாளர்களும், மாவட்ட கழக நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப்பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்பு பேச்சாளர்கள் மற்றும் கலைக்குழுவினருடன் தொடர்பு கொண்டு, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
சட்டமன்ற தொகுதி வாரியாக பொதுக்கூட்டங்கள் நடந்து முடிந்தவுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்கள் தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பேரூராட்சி, பகுதி மற்றும் ஊராட்சி, கிளை, வார்டு, வட்டங்கள் உட்பட பட்டிதொட்டியெங்கும் உள்ள மக்களிடம் கழக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் நலன் குறித்த பல்வேறு சிறப்பு அம்சங்களை பொதுக்கூட்டங்கள், தெருமுனை பிரசார கூட்டங்கள், துண்டு பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகள் வாயிலாக விளக்கிடும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications