முட்டி மோதினால் ஒன்னும் நடக்காது, பொறுமையாத் தான் இருக்கணும்: உதயகுமார்

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக போராட்டக்குழு தலைவர் உதயகுமார் உள்பட 15 பேர் கடந்த 9 நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று போராட்டக்குழுவுடன் தமிழக அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததையடுத்து உதயகுமார் உள்பட 15 பேர் நேற்று தங்களது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர்.
அதன் பிறகு அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உதயகுமார் பேசியதாவது,
அரசு அதிகாரிகள் அளித்த உறுதிமொழிகளை நம்பி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம். ஆனால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவிக்கும் வரை தொடர் உண்ணாவிரதம் தொடரும். அவர்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகு போராட்டத்தை வாபஸ் பெறுவது பற்றி முடிவு செய்யப்படும்.
அணு உலைக்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம் குறித்து கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். இது பொறுமையாக இருக்க வேண்டிய காலகட்டம். முட்டி மோதினால் பலன் கிடைக்காது. அதனால் விட்டுக் கொடுத்து தான் போக வேண்டும். இருப்பினும் நமது உரிமைகளை ஒரு நாளும் விட்டுக்கொடுக்க மாட்டோம். அரசு அதன் வேலையைச் செய்யட்டும். நாம் நமது வேலையைச் செய்வோம். சிறையில் உள்ளவர்கள் விடுதலையாகும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்லமாட்டார்கள்; குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மாட்டார்கள்; கடைகள் திறக்கப்படாது. நம் உணர்வுகளை அரசு மதிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications