ராணுவ வாகன கொள்முதல் வழக்கு: சிபிஐ வழக்கு-தொழிலதிபர் ரவிரிஷிக்கு சம்மன்
டெல்லி: ராணுவ வாகனங்கள் கொள்முதல் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரவிரிஷியை விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
ரவிரிஷிக்கு என்ன தொடர்பு?
இந்திய ராணுவத்துக்கு அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய லாரிகளை செக் நாட்டின் டட்ரா நிறுவனம் தயாரிக்கிறது. இவற்றை அரசு நிறுவனமான பிஇஎம்எல். மூலமாக ராணுவம் வாங்குகிறது.
டட்ரா நிறுவனத்தின் தரம்குறைந்த லாரிகளை கூடுதல் விலை கொடுத்து வாங்குவதற்காக ரூ14 கோடி லஞ்சம் தருவதாக முன்னாள் துணை தளபதி திஜேந்தர்சிங் பேரம் பேசினார் என்று ராணுவ தளபதி வி.கே.சிங்.புகார் கூறியிருந்தார். இந்த டட்ரா நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வைத்திருக்கிறது வெக்ட்ரா குழுமம். இக்குழுமத்தின் தலைவர்தான் ரவிரிஷி.
டெல்லியில் நடைபெறும் பாதுகாப்பு துறை தொடர்பான கண்காட்சிக்காக ரவிரிஷி வந்துள்ளார். தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் டட்ரா வாகனங்களை கொள்முதல் செய்தது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்குமாறு அவருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
பிஇஎம்.எல் விளக்கம்
இதனிடையே டட்ரா நிறுவனத்தின் லாரிகள் தரம் குறைந்தவை அல்ல என்று அரசு நிறுவனமான பிஇஎம்எல்-ன் தலைவர் வி.ஆர்.எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
டட்ரா நிறுவன லாரிகள் உயர் தொழில்நுட்பம் கொண்டவை என்றும் அவை தரம் குறைந்தவை என்று ராணுவ தளபதி வி.கே.சிங் கூறியிருப்பது சரியல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடியவை என்பதால் டட்ரா லாரிகளின் விலையும் அதிகமாகத்தான் இருக்கும் என்றும் நடராஜன் கூறியுள்ளார்.
-
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications