பிரதமராக இருந்தபோது லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக மகன் கூறுவது பொய்: தேவ கவுடா

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது தந்தை தேவேகவுடா பிரதமராக இருந்தபோது ராணுவத் தளவாடங்கள் வாங்குவதற்காக இடைத்தரகர்கள் என்னிடம் ரூ.350 கோடி தருவதாக பேரம் பேசினார்கள். ஆனால் அதை நாங்கள் ஏற்கவில்லை'' என்றார்.
இவ்வளவு நாட்கள் கழித்து இந்தத் தகவலை இப்போது ஏன் சொல்கிறீர்கள் என்று கேட்டபோது, இப்போது ராணுவ தளபதியே குற்றச்சாட்டை முன்வைப்பதால், அவ்வாறு நடந்திருக்கும் என்ற ஊகத்தில் என் தந்தைக்கும்தான் இவ்வாறு லஞ்சம் கொடுக்க அப்போது முன்வந்தார்கள் என்பதை வெளிப்படுத்தவே இவ்வாறு கூறினேன் என்றார்.
குமாரசாமியின் இத்தகவல் குறித்து செய்தியாளர்கள் தேவகவுடாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, ராணுவத் தளவாடங்கள் வாங்குவது தொடர்பாக லஞ்சம் கொடுக்க யாரும் என்னிடம் பேரம் பேசவில்லை. இது தவறான தகவல் என்றார்.
தந்தையின் மறுப்பு குறித்து மகன் குமாரசாமி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இல. கணேசனின் "கண்டுபிடிப்பு"
குமாரசாமியின் கருத்து தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மூத்த தலைவர்களில் ஒருவரான இல. கணேசன் புது குண்டு ஒன்றைப் போட்டுள்ளார்.
தந்தை பிரதமராக இருந்த போது லஞ்சம் கொடுக்க முயன்றனர் என்பதன் மூலமாக இப்போதைய பிரதமருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தனர் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பிரதமர் மன்மோகன்சிங் லஞ்சம் வாங்கும் இடத்தில் இப்போது இல்லை என்பதால் காங்கிரஸ் தலைவர் சோனியா குடும்பத்தினருக்கு இடைத்தரகர்கள் லஞ்சம் கொடுக்க முயற்சித்திருக்கலாம் என்பதே குமாரசாமியின் கருத்திலிருந்து தாம் "புரிந்து கொள்வதாக" இல. கணேசன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications