ஜார்க்கண்ட், உத்தர்காண்ட்டில் ராஜ்யசபா தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை நிறுத்தம்- தேர்தல் ஆணையம்
டெல்லி: ஜார்க்கண்ட் மற்றும் உத்தர்காண்ட் மாநிலங்களில் இன்று நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ஜார்க்கண்ட்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 2 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இத்தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்களைவிட தொழிலதிபர்களான அனுஸ்மன் மிஸ்ரா, ஆர்.கே. அகர்வால் மற்றும் பவன்குமார் தூத் ஆகியோரும் போட்டியிட்டனர்.
பாரதிய ஜனதா கட்சியின் 18 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் எம்.பியாகிவிடலாம் என்று அனுஸ்மன் மிஸ்ரா கனவு கண்டார். ஆனால் பாரதிய ஜனதா கட்சிக்குள் அனுஸ்மன் மிஸ்ராவை ஆதரிக்க கடும் எதிர்ப்பு உருவானது. வேறுவழியில்லாம அனுஸ்மன் மிஸ்ரா போட்டியிலிருந்து விலகினார். பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரையும் ஆதரிக்கமாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தொழிலதிபர்கள் களம் இறங்கியுள்ளதால் ஜார்க்கண்ட்டில் எம்.எல்.ஏக்களை விலைபேசும் குதிரை பேரம் நடக்க வாய்ப்பிருப்பதாக ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா தலைவர் பாபுலால் மராண்டி, தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.
மேலும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளரை எம்.எல்.ஏக்கள் ஆதரிப்பர் என்று பாஜக மேலிடம் அறிவித்திருந்தது.
இதனிடையே தொழிலதிபரான அகர்வாலின் சகோதரரின் வாகனத்தில் இருந்து கணக்கில்வராத ரூ2.25 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இது எம்.எல்.ஏக்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது என்பது தேர்தல் ஆணையத்தின் சந்தேகம். மாநிலங்களவை வேட்பாளரான அகர்வாலின் உறவினர் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலங்களவைத் தேர்தலில் இன்று பதிவான வாக்கு எண்ணிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவ்விவகாரம் மாநிலங்களவையில் எதிரொலித்தது. ஜார்க்கண்ட் மாநில பேரவையிலும் எழுப்பப்பட்டது.
உத்தர்காண்ட் மாநிலத்திலும் மாநிலங்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியையும் தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications