மதுரை அருகே சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே சிலிண்டர் வெடித்து ஒருவர் பரிதாபமாக பலியானார்.
மதுரை கள்ளிக்குடி அருகே உள்ளது மருதங்குடி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (45). இவரது மைத்துனர் இளங்கோவன்(48) இவர்கள் இருவரும் வீட்டின் அருகே டீ கடை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ராஜா தோட்டத்திற்கு சென்றதால், டீ கடையை இளங்கோவன் கவனித்து வந்தார். அப்போது திடீரென கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க இளங்கோவன் மற்றும் அவரது மகன் அன்பழகன் முயற்சி செய்தனர்.
அப்போது கடையில் இருந்த சிலிண்டர் எதிர்பாராத விதமாக திடீரென வெடித்துச் சிதறியது. இந்த விபத்தி்ல் இளங்கோவன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவரது மகன் அன்பழகன் பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications