கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக பிரமுகரை கட்சியை விட்டு தூக்கிய ஜெ.!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் குடவாசல் ராஜேந்திரன், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தராஜ் ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
இதுபோல் குடவாசல் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அரசன் கோவன், குடவாசல் சண்முகம் என்கிற தென்கோவன், மன்னார்குடி ஒன்றியம் பைங்காநாடு கிளைக் கழக அதிமுக செயலாளர் மகேந்திரன், மன்னார்குடி நகர மன்ற முன்னாள் உறுப்பினர் அறிவழகன், மன்னார்குடி அன்புராஜ் ஆகியோரும் இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
கழக உடன் பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களில் குடவாசல் ராஜேந்திரன் திருவாரூரில் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது போட்டியிட்ட திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டவர் ஆவார். கருணாநிதியை எதிர்த்து வெல்ல முடியாது என்றபோதிலும், கடுமையாக பிரசாரம் செய்து அனைவரையும் கவர்ந்தவர் ராஜேந்திரன்.
மேலும் குடவாசல் அரசன்கோவன் மற்றும் தென்கோவன் ஆகியோர் ராஜேந்திரனின் மகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியை விட்டு நீக்கும் அளவுக்கு இந்த மூவரும் செய்த குற்றம் என்னவோ.. தெரியவில்லை...!
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications