ராமஜெயத்தை கழுத்தை நெரித்துக் கொன்றனரா?

கல்லணை அருகே திருவளர்ச்சோலை என்ற இடத்தில் புதர் மண்டிய பகுதியிலிருந்து நேற்று காலை ராமஜெயத்தின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர்தான் உடலைக் கண்டுபிடித்தனர்.
பி்ன்னர் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில் ராமஜெயம் கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சுத் திணறி மரணமடைந்ததாக தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் தலையின் வலது மேல்புறம் ரத்தக் காயம் இருப்பதையும் டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது எப்படி ஏற்பட்டது என்பது குறித்துத் தெரியவில்லை. தலையில் அடித்ததால் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அல்லது இரும்புக் கம்பி ஏதாவது ஒன்றில் தலை மோதியதால் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
வேன் ஒன்றில்தான் ராமஜெயத்தை கடத்தியுள்ளனர். அப்போது வேனுக்குள் கொலை செய்ய நடந்த முயற்சியின்போது தலையில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
முன்னதாக ராமஜெயத்தின் தலையில் அரிவாள் வெட்டுக் காயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன என்பது நினைவிருக்கலாம். ஆனால் பிரேதப் பரிசோதனையில், கழுத்து நெரிக்கப்பட்டு மரணம் சம்பவித்ததாக தெரிய வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications