கேரளாவில் ரூ.250 கோடி நிதி நிறுவன மோசடி: தமிழக அரசியல் பிரமுகர் கைது!
சென்னை: கேரளாவில் ரூ.250 கோடி மோசடி செய்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரும், அரசியல் பிரமுகருமான நாராயணன் நரசிம்மலு என்பவரை கேரளா போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் நாராயணன் நரசிம்மலு(38). பிரபல தொழிலதிபர் மற்றும் அரசியல் கட்சி ஒன்றின் பிரமுகராக உள்ளார். அவர் மீது கேரளாவில் பல இடங்களில் நிதி நிறுவனங்கள் நடத்தி சுமார் 10,000 பேரிடம் ரூ.250 கோடி பணம் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு விசாரணைக்காக கொச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சதானந்தன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னைக்கு வந்த தனிப்படை போலீசார் நரசிம்மலுவை கைது செய்து கேரளாவிற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர் தற்போது கேரளாவில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக நரசிம்மலுவின் கூட்டாளிகளான கமலக்கண்ணன், பூபதி மனோகரன், கிருபாகரன் ஆகிய 3 பேரையும் ஏற்கனவே போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக மேலும் 3 பேரை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications