திருப்பூரில் 291 மாணவர்களுக்கு மத்திய அரசின் "இன்ஸ்பைர் விருது"

Subscribe to Oneindia Tamil

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிக்பள்ளிகளைச் சேர்ந்த 291 மாணவர்களுக்கு இன்ஸ்பைர் விருது வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நிதி உதவியுடன் நாடு முழுவதும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்நிதி உதவி வழங்கப்படுகிறது.

இளம் வயதிலேயே மாணவர்களுக்கு அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த Inspire விருதுகள் வழங்கப்படுகின்றன.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிக்பள்ளிகளைச் சேர்ந்த 291 மாணவர்களுக்கு Inspire விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவியர்க்கு பரிசுத் தொகையாக, தலா ரூ 5 ஆயிரம் வழங்கப்பட்டது. விருது பெற்ற மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் பாராட்டு தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+