ஸ்பெக்ட்ரம் அலைவரிசை நிறுவனங்களிடம் ரூ.28 ஆயிரம் கோடி வங்கிப் பணம் முடக்கம்?

நாடாளுமன்ற மக்களவையில் இது குறித்து பேசிய பிரணாப், 2ஜி அலைக்கற்றை உரிமம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வங்கிகள் ரூ.28 ஆயிரம் கோடி அளவுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடன் அளித்துள்ளன. 2ஜி உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிறுவனங்களும் இதில் அடக்கம் என்றார்.
அதாவது பல்வேறு நிறுவனங்களுக்கு 2ஜி அலைவரிசை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இத்தொகை வங்கிகளுக்கு கிடைக்காமல் போகலாம் என்பதை அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
2ஜி உரிமக் கட்டணம், டவர்கள் அமைத்தல், மூலதனச் செலவுகள், நடைமுறைச் செலவுகள் என பொதுத்துறை வங்கிகள் ரூ.19,135 கோடியும், தனியார் வங்கிகள் ரூ.8,803 கோடியும் கடன் வழங்கியுள்ளன. இத்தொகை 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலானது.
இது தவிர, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.76,977 கோடியை வங்கிகள் கடனாக வழங்கியுள்ளன என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
மாநிலங்களவையில் நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயண் மீனா எழுத்துப்பூர்வமாக ஒரு பதில் அளித்தார். அதில், இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி 2011 டிசம்பர் வரை, மின்துறையின் ஒட்டுமொத்த கடன் தொகை ரூ.2,62,532 கோடியாகும். பொதுத்துறை வங்கிகள், தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டு வங்கிகளில் பெற்ற கடன் ஆகியவை இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications