தெலுங்கானா தொடர்பாக கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லை: ப.சிதம்பரம்

உள்துறை அமைச்சகத்தின் மாதாந்திர அறிக்கையை டெல்லியில் வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தேசிய பயங்கரவாத தடுப்பு மையம்
தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்து மம்தா பானர்ஜி நேற்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அது குறித்த விரிவான விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த அமைப்பு குறித்து விவாதிக்க முதலமைச்சர்களின் கூட்டம் வரும் ஏப்ரல் மாதம் 16-ந்தேதி நடத்தப்படும்.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் முதல்வர்கள் மாநாடு நடக்கும். கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி நடக்க இருந்த கூட்டம் தேர்தல் மற்றும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் காரணமாக ஏப்ரல் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என நம்புகிறேன்.
தெலுங்கானா
ஆந்திராவின் முக்கிய அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்திக்கொள்ளுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் நடத்த அரசு தயாராக உள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்த கருத்து தெரிவிக்க 4 கட்சிகளே முன்வந்துள்ளது. மேலும் 4 கட்சிகள் கருத்து தெரிவிக்க மறுத்து வருகின்றன. ஆனால் இந்த விவகாரத்துக்காக இளைஞர்கள் தீக்குளிப்பது வருந்தத்தக்கது.
எம்.எல்.ஏ. கடத்தல்
எம்.எல்.ஏ.கடத்தல் விவகாரம் தொடர்பாக ஒடிசா முதல்வர் மத்திய அரசின் உதவியை கோரவில்லை. உளவுத்துறையின் தகவல்களை பகிர்ந்து கொள்வது குறித்து மட்டுமே கோரிக்கை வைக்கப்பட்டது.
ரஜோனா தூக்கு
பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங் படுகொலை வழக்கில் ரஜோனாவுகு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரும் கருணை மனுக்களை சிரோன்மணி குருத்வ்ரா பிரபந்த கமிட்டியும் டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகமும் 2 நாட்களுக்கு முன்புதான் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தன. இதற்கு முன்னுரிமை கொடுத்து ஆராய்ந்து குடியரசுத் தலைவருக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரைக்கும் என்றார். கருணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டாலே தூக்கு தண்டனையை ஒருவருக்கு நிறைவேற்றக் கூடாது என்பது விதி. அதையே நாம் செய்தோம்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications