கோடியக்கரையில் இலங்கை மீனவர்கள் இருவர் கைது !
வேதாரண்யம்: கோடியக்கரையில் படகுடன் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் நேற்று மதியம் 2 மணியளவில் யமஹா என்ஜின் பொருத்தப்பட்ட பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியது. இதில் இலங்கையை சேர்ந்த 2 மீனவர்கள் இருந்தனர். இவர்களிடம் வேதாரண்யம் போலீசார், கடற்கரை போலீசார், கப்பற்படை முகாம் அதிகாரிகள் ஆகியோர் விசாரித்தனர்.
இதில் அவர்கள் இலங்கை பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. அந்தோணிப்பிள்ளை என்பவருக்கு சொந்தமான படகில் சிவாஜிபிரபு (28), தயாளன் (18) ஆகியோர் மீன் பிடிக்க வந்ததாகவும், கடலில் காற்று அதிகமாக வீசியதால் திசை மாறி இவர்கள் கோடியக்கரை பகுதியில் கரை ஒதுங்கியதாகவும் தெரிய வந்தது.
மேலும் எரிபொருள் தீர்ந்ததால் படகை மேற்கொண்டு செலுத்த முடியவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, இலங்கை மீனவர்கள சிவாஜிபிரபு, தயாளன் ஆகியோரை வேதாரண்யம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் அவர்கள் பயன்படுத்திய படகு, வலை, மற்றும 60 கிலோ மீன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications