தமிழர் வாழும் பகுதியில் புதிய ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்: இலங்கை அரசு அறிவிப்பு
கொழும்பு:இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பிறகு, தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு புதிய ரயில் திட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளுடன் நடந்த போரின் போது ராணுவ வீரர்கள் மனித உரிமைகளை மீறி கொடூரமாக நடந்து கொண்டனர். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது. இதனால் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சர்வதேச நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்ற செய்தித் தொடர்பாளர் லக்ஷ்மண் யபா அபய்வர்தனே நேற்று கூறியதாவது:
இலங்கையின் வடகிழக்கு பகுதியையும் தெற்கு பகுதியையும் இணைக்கும் வகையில் புதிய ரயில் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. போரில் பாதிக்கப்பட்ட வடகிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். கடந்த 30 ஆண்டுகளாக நடந்த போரில் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தில் நொறுங்கிய பாலங்களை மீண்டும் கட்டவும் அரசு உத்தரவிட்டுள்ளது என்றார் அவர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications