சாதாராண உப்பு விற்க உள்ள தடைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

இதுகுறித்து தூத்துக்குடி தன்பாடு உப்பு உற்பத்தி வியாபாரிகள் சங்க தலைவர் தேன்ராஜ், செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் பொன்பாண்டியன் , சட்ட ஆலோசகர் சொக்கலிங்கம், உப்பு உற்பத்தியாளர் பீட்டர் ஜெபராஜ் ஆகியோர் கூறியதாவது:
கடந்த 2005ல் மத்திய அரசு அயோடின் கலந்த உப்பை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து சாதாரண உப்புக்கு தடை விதித்தது. இதனால் தமிழகத்தில் உப்பு உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர்.
இதை எதிர்த்து தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுபோல் மகராஷ்டிரா, குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் வழக்கு தொடரப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் வழக்குகளையும் ஒன்றாக இணைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் 6 மாதத்திற்குள் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு பின்னரும் மத்திய அரசு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் என்ற பெயரில் அயோடின் உப்பு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று கட்டுபாடு விதித்தது.
இதையடுத்து தூத்துக்குடி தன்பாடு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. இதில் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தை அமுல்படுத்த 6 வார காலத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் அயோடின் கலக்காத உப்பு விற்பனை செய்யலாம் என்ற நிலை உருவாகியுள்ளதால் தூத்துக்குடி மாவட்ட உப்பு உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications