பழனியில் பங்குனி உத்திர விழா தொடங்கியது.

தமிழகத்தில் புகழ் பெற்ற திருவிழாக்களில் மிகவும் முக்கிய திருவிழா பங்குனி உத்திர திருவிழாவாகும். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மூன்றாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் பழனியில் வெகு சிறப்பாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது.
தீர்த்தக் காவடி
கோடையில் கொதிக்கும் வெயிலில் இருந்து முருகனை குளிர்விக்கும் வகையில் கொடுமுடி ஆற்றில் பக்தர்கள் விரதமிருந்து குடங்களில் நீரை சேகரித்து, அதை தீர்த்த காவடியாக மேளதாளங்கள் முழங்க பழனிக்கு எடுத்து வருவது இந்த திருவிழாவின் முக்கிய அம்சமாகும். அவ்வாறு கொண்டு வரும் தீர்த்த காவடி நீரை முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்துவார்கள். இத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானை சமேதராக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.
கொடி ஏற்றம்
பங்குனி உத்திர விழாவை ஒட்டி பழனி திருஆவினன்குடி முருகன் கோயிலில் சனிக்கிழமை கொடியேற்ற நிகழ்ச்சிகள் துவங்கியது. கோயிலின் முன்புள்ள தங்க கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டன. வேத விற்பன்னர்கள் மந்திரங்களை முழங்க பின்பு சேவலும், வேலும், மயிலும், சந்திரரும், சூரியரும் பொறித்த மஞ்சள் நிற கொடியேற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் பக்தி பெருக்கில் அரோகரா முழக்கமிட்டனர். பின்பு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பங்குனி உத்திர விழாவின் முக்கிய அம்சமான பங்குனி தேரோட்டம் ஏப்ரல் 5 ம் தேதி நடைபெறுகிறது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications