அரசு பொது மருத்துவமனைக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்து திடீர் சாவு
சென்னை: சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திடீரென மயங்கி விழுந்து பலியானார். அவருக்கு திடீரென ஏற்பட்ட மாராடைப்பால் இறந்திருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக இருந்தவர் அழகானந்தம்(50). இவர் கொண்டித்தோப்பு காவல் குடிப்பிருப்பில் மனைவி சரஸ்வதி, 2 மகள்கள் மற்றும் 1 மகனும் உடன் வசித்து வந்தார்.
இந்த நிலையி்ல் நேற்று பணியில் இருந்த போது அழகானந்தத்திற்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக சிகிச்சை பெற மதியம் 1.30 மணிக்கு சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார்.
மருத்துவமனையில் உள்ள 1வது பிளாக் வளாகம் அருகே நடந்து சென்ற போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனை கண்ட மருத்துவமனை ஊழியர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த போது இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு அழகானந்தத்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பட்டது. மருத்துவமனையில் நடந்து வந்த போது, திடீரென ஏற்பட்ட மாராடைப்பால் அவர் இறந்திருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியி்ல பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications