நடராஜனுடன் தொடர்பு: அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு நீக்கம்!
திருவள்ளுர் : சசிகலாவின் கணவர் நடராஜனுடன் தொடர்பில் இருந்த சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சிலர் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கட்சியின் புகழுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட வடசென்னை மாவட்ட அதிமுக வக்கீல் பிரிவு துணை செயலாளர் ஆர். மதுரைவீரன் ஆர்.கே.நகர் பகுதி எம்ஜிஆர் மன்ற துணை தலைவர் ஆர். சூரியகுமார், தென் சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளர் எம். குணசேகரன் ஆகியோர் அவரவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகின்றனர்.
அதேபோல் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்ண்டி ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கே.எம்.எஸ். சிவக்குமார், திருவள்ளூர் தெற்கு மாவட்டம் அம்பத்தூர் நகர 51, வது வார்டு செயலாளர் வி. புகழேந்தி ஆகியோர் அவரவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சசிகலா கணவர் நடராஜனுடன் தொடர்புடன் இருந்ததால் தான் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications