ஆப்கன் நேட்டோ படைகளுக்கு இந்தியா உதவும்?
வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினருக்கான உதவிகளை இந்தியா செய்யக் கூடும் என்று தெரிகிறது.
பாகிஸ்தானில் இருந்துதான் ஆப்கனில் உள்ள நேட்டோ படைகளுக்கான அனைத்து உதவிகளும் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் நேட்டோ படைகள் எல்லைப் பகுதியில் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் 24 படையினர் கொல்லப்பட்டனர். இதையடுத்து நேட்டோ படையினருக்கான விநியோகப் பாதையை பாகிஸ்தான் மூடியது.
இது தொடர்பாக பாகிஸ்தானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்தும் பிடிவாதமாக இருந்து வருகிறது. இதனால் அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
விநியோகப் பாதையை பாகிஸ்தான் மூடிவிட்டதால் திட்டமிட்டபடி 2014-ம் ஆண்டுக்குள் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது
இந்நிலையில் பாகிஸ்தானுடனான பேச்சுகள் தோல்வி அடையும் நிலையில் நேட்டோ படையினருக்கான உதவிகளை செய்யுமாறு அமெரிக்கா இந்தியாவை கேட்டுக் கொள்ளும் என்று அமெரிக்க ராணுவ தளபதிகளில் ஒருவரான லெப். ஜெனரல் ப்ராக் பாண்ட்டர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் இந்தியாவை இணைப்பது தொடர்பாக சர்வதேச அளவில் விவாதத்தை அந்நாடு உருவாக்கியிருக்கிறது.
அமெரிக்காவுக்கும் சோவியத் ரஷியாவுக்கும் பனிப்போர் நடைபெற்ற காலங்களில் "அணிசேரா கொள்கை"யைக் கடைபிடித்தது இந்தியா. பனிப்போருக்குப் பிந்தைய, சோவியத் ரஷியா சிதைவுக்குப் பின் இந்தியாவின் நிலைமை மெதுவாக தலைகீழாக மாறிவிட்டது. இதன் உச்சமாக தமிழீழத்தில் இலங்கை அரசு நிகழ்த்திய மோசமான இனப்படுகொலைக்கு இந்தியாவும் உடந்தையாக இருந்தது.
தற்போது சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவின் ஆதரவு நாடாகவே இந்தியா வலம்வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆப்கன் நேட்டோ படைகளுக்கு உதவி அமெரிக்கா அணியில் இருப்பதை இந்தியா பகிரங்கப்படுத்திக் கொள்ளும் என்றே சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications