குறுகிய காலத்தில் அனைவரின் அன்பையும், பாராட்டுதலையும் பெற்றவர் முத்துக்குமரன்- ஜெ.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2011ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.பி.முத்துக்குமரன் இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் அகால மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
சகோதரர் முத்துக்குமரன் சட்டப் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு திருவாங்குளம் பஞ்சாயத்து யூனியன் உறுப்பினராக நல்ல முறையில் பணியாற்றி மக்களின் நன் மதிப்பைப் பெற்றவர். அனைவரிடத்திலும் அன்புடன் பழகக்கூடியவர்.
சிறிது காலமே சட்டமன்றப் பேரவை உறுப்பினராக பணியாற்றினாலும் சிறப்புடனும், திறம்படவும் பணியாற்றி அனைவரின் அன்பையும், பாராட்டு தலையும் பெற்றவர்.
சகோதரர் முத்துக்குமரனின் மறைவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு பேரிழப்பாகும். சகோதரர் முத்துக்குமரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications