திருப்பதியில் ஒரே நாளில் ரூ.5.73 கோடி வசூல்: ஒரு பக்தர் மட்டும் ரூ.2 கோடி காணிக்கை
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வசூல் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ. 5 கோடியே 73 லட்சத்து 2 ஆயிரத்தை தொட்டுள்ளது. அதில் ஒரேயொரு பக்தர் மட்டும் ரூ. 2 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். அதனால் கோவிலின் வருமானம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. வார இறுதி நாள் மற்றும் ராம நவமியையொட்டி நேற்று திருப்பதி கோவிலுக்கு 70,000 பக்தர்கள் வந்தனர். பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் போட்ட பணம், நகை, பொருட்கள் ஆகியவை நேற்று எண்ணப்பட்டன.
முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.5 கோடியே 73 லட்சத்து 2 ஆயிரம் வசூலாகியுள்ளது. மேலும் ஒரேயொரு பக்தர் மட்டும் ரூ. 2 கோடி காணிக்கையாக செலுத்தியது தெரிய வந்தது.
கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி புத்தாண்டு தினத்தையொட்டி ரூ.4.19 கோடி வசூலானது தான் நேற்று வரை சாதனை வசூலாக இருந்தது. ஆனால் நேற்றைய வசூலான ரூ.5 கோடியே 73 லட்சத்து 2 ஆயிரம் தான் தற்போது புதிய சாதனை வசூலாக உள்ளது.












Click it and Unblock the Notifications