பயங்கரவாத தடுப்பு மையம் குறித்து மே 5ம் தேதி முதல்வர்கள் மாநாடு!
டெல்லி: தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் தொடர்பாக ஏராளமான மாநில முதல்வர்கள் தொடர்ந்து ஆட்சேபனையும், கடும் எதிர்ப்பும் தெரிவித்து வந்த நிலையில், இதுதொடர்பாக முதல்வர்கள் மாநாட்டைக் கூட்ட வேண்டும் என்ற முதல்வர்களின் கோரிக்கையை ஏற்று மே 5ம் தேதி மாநாடு கூட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு ப.சிதம்பரம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அதில், வருகிற மே 5- ந்தேதி அன்று முதலமைச்சர்கள் கூட்டத்தை மத்திய அரசு நடத்த உள்ளது. இதில் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
இக்கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா ஐந்து முறை கடிதம் எழுதியிருந்தார். ஆனால் பிரதமர் தரப்பிலிருந்து பதிலே வரவில்லை. இந்த நிலையில் ஒரு கடிதம் எழுதிய மமதாவுக்கு உடனே பதில் போனதோடு, கூட்டத்தையும் கூட்டியுள்ளது மத்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications