நீலகிரி வனப்பகுதியில் 3 யானைகள் பலி: புலி தாக்கி குட்டி யானை பலி
நீலகிரி: நீலகிரி வனப்பகுதியில் 2 குட்டி யானைகள் உள்பட 3 யானைகள் பலியான சம்பவம் விலங்கின ஆர்வலர்களை பெரும் கவலைகொள்ள செய்துள்ளது.
நீலகிரி மாவட்டம் தொட்ட மாயார் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தண்ணீர் குடிக்க வந்த 25 வயது கொண்ட பெண் யானை சேற்றில் சிக்கியது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை மீட்டு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் யானையின் உடல் நிலை மிகவும் பலவீனமாக இருந்ததால் நேற்று காலை அது சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது.
இறந்து போன யானையை கால்நடை மருத்துவர் மனோகரன் பிரேத பரிசோதனை செய்தார். இதைத் தொடர்ந்து யானையின் உடலை அங்கேயே புதைத்தனர்.
இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகம் கார்குடி வனசரகம் அபயாரன்யம் வனப்பகுதியில் 4 வயது பெண் யானைக்குட்டி ஒன்று இறந்து கிடந்தது. இதே போன்று உதகை வனக்கோட்டம் சிங்கார வனச்சரகம் பொக்கப்புரம் வனப்பகுதியில் ஒன்றரை வயதுள்ள ஆண் யானைக்குட்டி ஒன்று புலி தாக்கி இறந்து கிடந்தது.
நீலகிரி வனப்பகுதியில் மூன்று யானைகள் பலியான சம்பவம் விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications