மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு-திருவண்ணாமலையில் 7ம் தேதி விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil

மின் கட்டண உயர்வைக் கண்டித்து ஏப்ரல் 7ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மின்வாரிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தேமுதிக அறிவித்திருந்தது.
தற்போது இந்தப் போராட்டத்தில் விஜயகாந்த்தும் பங்கேற்கிறார். 7ம் தேதி காலை 11 மணிக்கு திருவண்ணாமலையில் நடைபெறும் போராட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்கிறார். அவருடன் மச்சானும், இளைஞர் அணிச் செயலாளருமான சுதீஷும் கலந்து கொள்கிறார். அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும் பங்கேற்பார் என்று அறிவி்க்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications