குடியரசுத் தலைவர் வேட்பாளர் பட்டியலில் இணைந்தார் தொழில்நுட்ப ஆலோசகர் சாம்பிட்ரோடா

நாட்டின் 16-வது குடியரசுத் தலைவர் வரும் ஜூலை மாதம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். குடியரசுத் தலைவராக யாரை மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி முன் நிறுத்தும் என்று நாள்தோறும் ஒவ்வொரு யூகங்களும் ஒவ்வொரு பெயரும் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக இல்லாத நிலையில் முக்கிய விவகாரங்களில் கூட்டணிக் கட்சிகளை மத்திய அரசு நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வில் மிகவும் கவனம் செலுத்தப்படுகிறது. சிறுபான்மை, தலித் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தில் இருந்து ஒருவரை முன் நிறுத்துவதன் மூலம் சிக்கலான நிலைமைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பது காங்கிரசின் கணக்கு.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஓய்வு பெறும் நிலையில் தற்போதைய துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, மக்களவைத் தலைவர் மீரா குமார், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் டாக்டர் கரண் சிங் ஆகியோரது பெயர்கள் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கான பட்டியலில் இடம்ப்டித்திருக்கின்றன.
இந்தப் பட்டியலில் இப்போது இணைந்திருக்கிறார் பிட்ராடோ.
குஜராத்தின் சுரேந்திரர் நகர் மாவட்டம் ஹல்வாட் தாலுகா திகார் கிராமத்தைச் சேர்ந்தவர் பிட்ராடோ. ஆனால் இளம்வயதிலேயே இவரது குடும்பத்தினர் ஒரிசாவுக்கு இடம் பெயர்ந்து விட்டனர்.
அமெரிக்காவுக்குச் சென்று தகவல் தொழில்நுட்பத்துறையில் கோலோச்சிக் கொண்டிருந்த பிட்ராடோவை ராஜீவ்தான் இந்தியாவுக்கு அழைத்து வந்தார். கணணி மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறையில் இந்தியாவுக்கு பங்களிப்புச் செய்வதற்காக அழைக்கப்பட்டார். கொடுத்த வேலையை மிகச் சரியாக செய்து இன்று இந்தியாவில் நடந்துள்ள கம்ப்யூட்டர் புரட்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார்.
தற்போது பிரதமர் மன்மோகன் சிங்கின் தகவல் தொழில்நுட்ப மேலாண்மை ஆலோசகராக இருக்கிறார்.
இதுமட்டுமின்றி மேற்குவங்கத்தில் மமதா பானர்ஜி ஆட்சியைக் கைப்பற்றவும் இவரது ஆலோசனைதான் காரணம் என்கிறது அரசியல் வட்டாரம். இதேபோல் சரத்பவார் மற்றும் நவீன் பட்நாயக் ஆகியோருடனும் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருப்பவர் என்பதால் இவரது வாய்ப்பை கூட்டணிக் கட்சிகள் முட்டுக் கட்டையின்றி ஏற்கும் என்பதே காங்கிரசின் எண்ணம்.
அணு விஞ்ஞானியான அப்துல் கலாம் நாட்டின் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதை முன்மாதிரியாகக் கொண்டு சாம் பிட்ரோடாவை முன்னிறுத்துவதாகவும் கூறப்படுகிறது.
சாம் பிட்ரோடா தேர்வு செய்யப்பட்டால் குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் உயரிய பதவியில் அமருவது இதுவே முதல்முறையாக இருக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications