'அக்காக்கள்' இணைந்தும் புண்ணியமில்லை... திவாகரன் மறுபடியும் கைது!

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் அருகே உள்ள வீரமாங்குடி கிராமம் கொள்ளிடம் ஆற்று மணல் குவாரியில் மணல் அள்ளுவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டது. ஆனாலும் மன்னார்குடியை சேர்ந்த சசிகலா தம்பி திவாகரன், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா பாப்பாகோவிலை சேர்ந்த கார்த்திகேயன், அறந்தாங்கியை சேர்ந்த தியாகராஜன் ஆகிய மூவரும் ஆட்களை வைத்து அங்கு தொடர்ந்து மணல் அள்ளி வந்தனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் காவிரி வடிநிலக்கோட்ட பொதுப்பணித்துறை பிரிவு அலுவலர் சவுந்தர்ராஜன் தஞ்சை எஸ்பி அனில்குமார் கிரியிடம் புகார் தெரிவித்தார். எஸ்பி உத்தரவின்பேரில் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் 28ம் தேதி கார்த்திகேயனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திவாகரனை, இந்த வழக்கில் கைது செய்த தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நேற்று அவரை பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி ராமலிங்கம், திவாகரனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து திவாகரன் மீண்டும் திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
திவாகரன் மீது ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதில் முதலில் ஒரு வழக்கில் ஜாமீ்ன் கிடைத்தது. ரிஷியூரில் பெண் வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய வழக்கில் சமீபத்தில் ஜாமீன் கிடைத்தது. முதல்வர் ஜெயலலிதாவுடன், சசிகலா மீண்டும் இணைந்த அடுத்த சில நாட்களில் விசாரணைக்கு வந்த இந்த ஜாமீ்ன் மனு மீதான விசாரணையின்போது அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை. இதனால் திவாகரனுக்கு எளிதாக ஜாமீன் கிடைத்தது.
இதனால் திவாகரன் தரப்பு பெருத்த நம்பிக்கையில் இருந்தது. ஆனால் நேற்று மணல் அள்ளிய வழக்கைப் போட்டு திவாகரனின் நம்பிக்கையில் மண்ணைப் போட்டு விட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications