For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா மின் கட்டணத்தை குறைத்தது வெறும் நாடகம்: மு.க.ஸ்டாலின்

Google Oneindia Tamil News

Stalin
மதுரை: தமிழக அரசு மின் கட்டணத்தை ஓரளவு குறைத்துள்ளது வெறும் நாடகம் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பால் விலை, பஸ் கட்டணத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து மின் கட்டணத்தையும் உயர்த்தியது. ஏற்கனவே வாட்டும் வெயில் காலத்தில் நிலவும் பல மணிநேர மின்வெட்டால் தவிக்கும் மக்களை இந்த மின் கட்டண உயர்வு எரிச்சலடையச் செய்தது. ஒரு நாளில் முக்கால்வாசி நேரம் மின்சாரம் இருப்பதில்லை, அதில் மின் கட்டண உயர்வு வேறு என்று மக்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் தான் அரசு மின் கட்டணத்தை ஓரளவு குறைத்துள்ளது.

திண்டுக்கல் மற்றும் தேனியில் திமுக இளைஞரணிக்கான நேர்காணல் இன்று நடைபெறுகின்றது. இதற்காக சென்னையில் இருந்து விமானத்தில் மதுரைக்கு வந்த திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மின் கட்டணத்தை தமிழக அரசு குறைத்தது வெறும் நாடகம். கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என சட்டசபையில் நாங்கள் வலியுறுத்தினோம். அது தான் எங்கள் நிலைப்பாடு என்றார்.

ராமஜெயம் கொலையில் இது வரை யாரையும் போலீசார் கைது செய்யவில்லையே? என செய்தியாளர்கள் கேட்டபோது, அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.

English summary
DMK treasurer MK Stalin has called the ADMK government's action of reducing power tariff as a drama. DMK wants CBI to investigate the Ramajayam murder case, he told.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X