வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு?
சென்னை: திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் குறித்த அரசியல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசியலின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ள இந்த தொகுதியில், திமுக தரப்பில் நடிகர் வடிவேலுவை களமிறக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக வெளியாகியுள்ள தகவல் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இனிகோ இருதயராஜ், அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பெயர்கள் தான் 'டாப்'-ல் உள்ளது என்கின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் முதலமைச்சராக பொறுப்பேற்ற அவர், பெரம்பூர் தொகுதியை தக்க வைத்துக் கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து அந்தத் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு, விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த இடைத்தேர்தல் சாதாரண தேர்தலாக இல்லாமல், தமிழக அரசியலில் பல கட்சிகளை தலையெழுத்தை தீர்மானிக்கும் தேர்தலாக பார்க்கப்படுகிறது.
திருச்சி கிழக்கு
ஆட்சியில் இருக்கும் தவெக தனது வெற்றியை மீண்டும் நிரூபிக்குமா? தோல்வியிலிருந்து மீள திமுக முயற்சிக்குமா? தனது இடத்தை அதிமுக தக்க வைத்துக் கொள்ளுமா என்ற பல கேள்விகளுக்கு அந்த தொகுதி இடைத் தேர்தலில் தான் பதில் கிடைக்கும். திருச்சி மாநகரம் நீண்ட காலமாக திமுகவின் வலுவான பகுதியாக கருதப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த தேர்தலில் அங்கு திமுக தோல்வியடைந்தது கட்சித் தலைமையை அதிர்ச்சியடையச் செய்தது. இதனால் இடைத்தேர்தலை மிக முக்கியமானதாக திமுக பார்க்கிறது என கூறப்படுகிறது.
வடிவேலு
இந்த சூழ்நிலையில்தான் நடிகர் வடிவேலுவின் பெயர் அரசியல் களத்தில் பேசப்படத் தொடங்கியுள்ளது.
அறிவாலய வட்டாரங்களில் இருந்து வெளியாகும் தகவலின்படி, திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் வடிவேலுவை வேட்பாளராக நிறுத்தும் வாய்ப்புகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. திரைப்பட ரசிகர்கள் மத்தியில் இன்னமும் பிரபலமான முகமாக இருக்கும் வடிவேலு, தேர்தல் பிரசாரத்தில் கவனத்தை ஈர்க்கக்கூடியவர் என்பதால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இடைத்தேர்தல்
மேலும், கடந்த சில ஆண்டுகளாக திமுகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்த போதிலும், அவருக்கு ஆட்சியி முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற வருத்தம் வடிவேலுவுக்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை சரிசெய்யும் முயற்சியாகவே இடைத்தேர்தல் வேட்பாளர் வாய்ப்பு குறித்து பேச்சு நடப்பதாக சிலர் கூறுகின்றனர்.
ஆனால் இந்த யோசனைக்கு கட்சிக்குள் ஒருமித்த ஆதரவு இருப்பதாக தெரியவில்லை.
இனிகோ இருதயராஜ்
திருச்சி கிழக்கு தொகுதியைச் சேர்ந்த பல திமுக நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜை மீண்டும் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களது வாதம் என்னவென்றால், தொகுதி மக்களிடம் ஏற்கனவே அறிமுகம் உள்ள ஒருவரை நிறுத்துவது தேர்தல் ரீதியாக பாதுகாப்பான முடிவாக இருக்கும் என்பதுதான். அதேநேரத்தில், வடிவேலுவை வேட்பாளராக அறிவித்தால் எதிரணிகளுக்கு அது அரசியல் ஆயுதமாக மாறக்கூடும் என்ற அச்சமும் சில நிர்வாகிகளிடம் இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜயகாந்த்
குறிப்பாக நடிகர் விஜயகாந்துடன் ஏற்பட்ட பழைய சர்ச்சைகள் இன்னும் சில வாக்காளர்களின் மனதில் இருக்கலாம் என்பதால், அது தேர்தல் களத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று, அமைச்சர் அன்பில் மகேஷை களமிறக்கலாம் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் தொகுதியில் கட்சியின் முழு பலத்தையும் வெளிப்படுத்த முடியும் என்ற வாதமும் எழுந்துள்ளது.
வேட்பாளர் தேர்வு
மறுபுறம், தவெக தரப்பும் இந்த இடைத்தேர்தலை மிகவும் கவனமாக அணுகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்ற தொகுதி என்பதால், அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எனவே, வடிவேலு உண்மையில் களமிறக்கப்படுவாரா?, அல்லது திமுக பழைய முகத்தையே நம்புமா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் வேட்பாளர் தேர்வு குறித்த விவாதம் தொடங்கியிருப்பதே, திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை காட்டுகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
கோவையன்ஸ் ஓட்டு மட்டும் போதுமா? மதுரையை மறந்த விஜய்! கொந்தளிப்பில் ’சவுத்’ மக்கள்! என்னாச்சு? -
"ஜோசியக்காரர் சொன்னாரே" விஜயின் கயிறும் ராகுலின் கேக்கும்! விடியல் பயணம் மட்டும் இல்லேனா? லியோனி நச் -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications