காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கிய சந்திப்பு டெல்லியில் நடைபெற்றுள்ளது. தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகம் தலைவருமான சி.ஜே. விஜய், இந்தியத் துணைக்குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை அதிகாரப்பூர்வமாக சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்த சந்திப்பாக வெளியில் தெரிந்தாலும், இதன் பின்னணியில் நடைபெற்ற அரசியல் பேச்சுகள் டெல்லி மற்றும் சென்னை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த சந்திப்பின்போது, தவெகவின் காங்கிரஸ் கட்சியுடனான தேர்தல் கூட்டணி மற்றும் அமைச்சரவை பங்கீடு விவகாரங்கள் முக்கிய இடம் பிடித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக மேலிடம் இந்த கூட்டணியை விரும்பவில்லை என்பதை துணை ஜனாதிபதி தரப்பு நேரடியாக முதல்வர் விஜய்யிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஒரு நாடாளுமன்றத் தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கிய முடிவுக்கு பாஜக தரப்பு கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

CM Vijay Meets Vice President CP Radhakrishnan

சந்திப்பின் போது சி.பி. ராதாகிருஷ்ணன் தரப்பு, "பாஜக மேலிடத்துக்கு இந்த நகர்வு சுத்தமாகப் பிடிக்கவில்லை. காங்கிரஸை கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என்பதே டெல்லியின் நிலைப்பாடு. ஆனால் அதை மீறி எம்பி சீட் கொடுத்திருக்கிறீர்கள்" என்று வருத்தத்தை வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முதல்வர் விஜய் தரப்பு உடனடி விளக்கம் அளித்தது. "காங்கிரசை நாங்கள் வளர்க்க விரும்பவில்லை.. காங்கிரஸ் உடனான கூட்டணிக்கு பிரவீன் சக்ரவர்த்தியின் தொடர் முயற்சிகளே காரணம். அவரது பேச்சுவார்த்தைகளால் இது சாத்தியமானது" என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்.

எனினும், இந்த விளக்கம் டெல்லி அதிகார மையங்களை திருப்திப்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. "இந்த காரணங்கள் டெல்லியின் கோபத்தை தணிக்காது" என எச்சரிக்கும் விதத்தில் பதிலளிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வரவிருக்கும் தமிழக உள்ளாட்சித் தேர்தல் விவகாரமும் இந்த சந்திப்பில் பேசப்பட்டது. காங்கிரஸ் கட்சி, முதல்வர் விஜய்யை தங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்த முயல்வதாக சி.பி. ராதாகிருஷ்ணன் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் 7 மாநகராட்சி மேயர் பதவிகளையும், கிராமப்புற உள்ளாட்சியில் 20 சதவீத இடஒதுக்கீட்டையும் காங்கிரஸ் கோரும் என எதிர்பார்ப்பு உள்ளதாகவும், இதன் மூலம் தமிழகத்தில் காங்கிரஸை மீண்டும் வலுப்படுத்த முயற்சிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

"தமிழகத்தில் காங்கிரஸை உயிர்ப்பிக்க வேண்டிய அவசியம் தவெகவுக்கு ஏன் வந்தது? பாஜக மேலிடம் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது" என அடுக்கடுக்கான கேள்விகளை துணை ஜனாதிபதி தரப்பு எழுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்த விஜய், தேசிய அளவில் பாஜகவுடன் மோதலை தவிர்க்க முயல்கிறாரா அல்லது காங்கிரஸ் கூட்டணியை உறுதியாக தக்கவைக்கப் போகிறாரா என்பது இப்போது பெரும் கேள்வியாக உள்ளது.

சந்திப்பின்போது முதல்வர் விஜய் தரப்பு மௌனம் காத்ததாகவும், எந்த வாதத்திலும் ஈடுபடாமல் கேட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது. இந்த அமைதி, வரும் நாட்களில் பெரிய அரசியல் மாற்றங்களுக்கு வித்திடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொகுதிப் பங்கீடு எப்படி அமையும் என்பதைப் பொறுத்தே தவெக - காங்கிரஸ் உறவு மற்றும் டெல்லி உறவு தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் இந்த சந்திப்பு தமிழக அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

இந்த சம்பவம் தமிழக அரசியலில் புதிய கூட்டணி சமன்பாடுகளை உருவாக்கும் என்பது உறுதி. முதல்வர் விஜய்யின் அடுத்த நகர்வுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+