சபரிமலை அய்யப்பன் அதிருப்தி: தேவபிரசன்னம் பார்த்த ஜோதிடர்கள் எச்சரிக்கை

சபரிமலை அய்யப்பன் கோயிலில் அன்னதான மண்டபம் அமைப்பதற்காக தேவபிரசன்னம் பார்க்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில் கடுப்பசேரி பத்மநாபசர்மா தலைமையில் பார்க்கப்பட்ட தேவபிரசன்னத்தில் வெளியான தகவல்கள்:
உற்சவமூர்த்தியில் குறை
கோவிலின் சன்னதி சாஸ்திர முறைப்படி அமைக்கப்படவில்லை. குறைபாடுடன் இருந்த உற்சவமூர்த்தி சிலையை புதிய மேல்சாந்தி சரி செய்திருந்தாலும் முழுமையாக சரி செய்யப்படவில்லை. அன்னதான மண்டபத்துக்கான இடத்திலும் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.
அய்யப்பனுக்கு அதிருப்தி
இதையெல்லாம் செய்வதற்கு முன் சாமி அய்யப்பன் அதிருப்தியில் இருக்கிறார். அதாவது அந்த காலத்தில் சிறிதளவு பொருட்களை வைத்தே பூஜை செய்யப்பட்டது. இப்போது கோவில் வளர்ச்சி அடைந்துவிட்ட நிலையிலும்கூட அதே அளவு பொருட்களை பூஜைக்கு பயன்படுத்துவதாலேயே அய்யப்பனுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாம். இதுமட்டுமின்றி பூஜையிலும்கூட முழுமையான சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்படுவதில்லை என்பதாலும் சாமி கோபத்தில் இருக்கிறாராம்.
அம்மனுக்கும் கோபம்
அய்யப்பன் கோயில் அருகே உள்ள மாளிகைப்புறத்தம்மனும் கோபத்தில் இருக்கிறாராம். இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது பஸ்மக்குளத்தை மாற்றியதுதானாம். மீண்டும் பழைய இடத்துக்கே பஸ்மக் குளத்தை மாற்ற வேண்டும் என்கிறாராம் அம்மன்.
மேலும் ராசிப் பொருத்தத்திலும் ஒரு ராசி பாதகமாக வந்திருப்பதால் பிரச்சனைகள் பெரிய அளவு ஏற்படும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
நிர்வாக அதிகாரிக்கு தண்டனை
கோவில் தந்திரியின் அனுமதியுடனும் செயல் அலுவலரின் பரிந்துரையுடன் முன்கூட்டியே விண்ணப்பித்து அனுமதி பெற்றே கேரள கோவில்களில் தேவபிரச்சனம் நடத்தப்பட வேண்டும்.
இதை மீறி சபரிமலை கோவிலில் பிரசன்னம் பார்த்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் கோவில் நிர்வாக அதிகாரி ராஜனை தற்காலிக பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது. செயல் அலுவலர் சதீஷிடம் விளக்கம் கோரவும் முடிவு செய்துள்ளனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications