அனுமதியின்றி தேவபிரசன்னம்: சபரிமலை கோயில் மேலாளர் சஸ்பெண்ட்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தேவசம்போர்டு தந்திரியின் அனுமதியின்றி தேவபிரசன்னம் நடத்தியது தொடர்பாக சபரிமலை கோயில் மேலாளர் ராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கேரளாவில் முக்கிய கோயில்களில் சீரமைப்பு பணிகள், முக்கிய பூஜைகள் நடத்துவதற்கு முன்பாக தெய்வத்தின் அனுமதி கேட்பதற்காக தேவபிரசன்னம் நடத்தப்படும். சில ஆண்டுகளுக்கு முன் சபரிமலை ஐயப்பன் கோயில் பிரபல ஜோதிடர் உன்னிகிருஷ்ணன் பனிக்கர் தலைமையில் நடந்த தேவபிரச்சன்னத்தி்ல் ஐயப்பன் விக்கிரகத்தை பெண் ஒருவர் தொட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக கன்னட நடிகையும், பனிக்கரும் நடத்திய நாடகம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஐயப்பன் கோயிலில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் மீண்டும் தேவபிரசன்னம் நடத்தப்பட்டது. ஆனால் இதுபற்றி தேவசம்போர்டு தலைவர், ஆணையாளர் உள்பட உயர் அதிகாரிகளுக்கோ, சபரிமலை தந்திரிக்கோ எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. பிரபல ஜோதிடரான பத்மநாப சர்மா, கிருஷ்ணன் நம்பூத்ரி தலைமையி்ல் நடந்த இந்த தேவபிரச்சன்னததில் சபரிமலை கோயில் நிர்வாக அதிகாரி சதிஷ்குமார், கோயில் மேலாளர் ராஜன் உள்பட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.

தேவசம்போர்டு தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் ரகசியமாக தேவபிரசன்னம் நடத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்த தேவசம்போர்டு தலைவருக்கு கேரள தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார் நேற்று உத்தரவிட்டார். இதையடுதது நேற்று திருவனந்தபுரம் தேசவம்போர்டு அவசர கூட்டம் நடந்தது. இதி்ல் அனுமதி இல்லாமல் தேவபிரசன்னம் நடத்தியதற்காக கோவில் மேலாளர் ராஜனை சஸ்பெண்ட் செய்ய முடிவு செய்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+