2 மீனவர்கள் கொலை வழக்கில் இத்தாலிய கப்பல் கேப்டனை சேர்க்க முடியாது: கொல்லம் கோர்ட் உத்தரவு
கொல்லம்: 2 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் இத்தாலிய கப்பல் கேப்டனையும் சேர்கக்கோரும் மனுவை கொல்லம் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் உள்பட 2 மீனவர்களை அந்த வழியாக வந்த இத்தாலிய கப்பலான என்ரிகா லெக்சியின் பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கில் அந்த கப்பலின் பாதுகாவலர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் கப்பல் கேப்டன் உள்பட வேறு யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் கப்பல் கேப்டனையும் இந்த வழக்கில் சேர்க்கக் கோரி கொல்லத்தைச் சேர்ந்த ஸ்ரீவாசன் என்பவர் கொல்லம் நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நேற்று அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் கொல்லப்பட்ட மீனவர் அஜிஸ் பி்ங்கோவின் உறவினர் ஜானட் மேரி கொல்லம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் கப்பல் கேப்டன் உம்பர்டோவையையும் சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கேப்டனை வழக்கில் சேர்க்க வேண்டியதில்லை என உத்தரவிட்டது.
இது குறித்து நீதிபதி கோபக்குமார் கூறுகையில், கப்பல் கேப்டனுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என போலீஸ் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கேப்டனை வழக்கில் சேர்க்க முடியாது. அதற்கான அவசியமும் இப்போது இல்லை என்றார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications