சாலை விபத்து: உறவினரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பாஜக நிர்வாகி உள்பட 3 பேர் பலி
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட உறவினரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஏற்பட்ட சாலை விபத்தில் பாஜக நிர்வாகி உள்பட 3 பேர் பலியாகினர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). அவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீர் என்று உடல் நலம் பாதித்தது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக அவரை அங்கிருந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர்.
அந்த ஆம்புலன்ஸிற்கு பின்னால் ஒரு காரில் அவரது உறவினர்கள் சந்திரசேகர், மதிவாணன் (55), விநாயகமூர்த்தி (25), ஜெகதீசன் (46), கார்த்திக் (30), நாகப்பன் (22), கோவிந்தன் (23), தெட்சிணா மூர்த்தி (32) ஆகியோர் சென்றனர். நெடுமுடி கிள்ளிவளவன் என்பவர் காரை ஓட்டினார்.
புதுக்கோட்டை-அறந்தாங்கிக்கு இடையே உள்ள முத்துப்பட்டினம் என்ற இடத்தில் நள்ளிரவு 12.30 மணிக்கு சென்று கொண்டிருக்கையில் புதுக்கோட்டையில் இருந்து கரும்பு ஏற்றிக் கொண்டு அறந்தாங்கி நோக்கி வந்த டிராக்டரும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதின. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. டிராக்டரில் இருந்த கரும்புகள் சாலையில் விழுந்தது.
இந்த கோர விபத்தில் கார் டிரைவர் நெடுமுடி கிள்ளிவளவன், காரில் இருந்த மதிவாணன், விநாயகமூர்த்தி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர். மேலும் காரில் இருந்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான விநாயகமூர்த்தி அறந்தாங்கி நகர் பாஜக இளைஞர் அணி துணை தலைவர் ஆவார். இந்த சம்பவம் பற்றி அறிந்த பாஜக மாநில துணை செயலாளர் ஹெச். ராஜா மற்றும் புதுக்கோட்டை பாஜக நிர்வாகிகள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நெடுமுடி கிள்ளிவளவன், மதிவாணன், விநாயகமூர்த்தி ஆகியோரின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். காயமடைந்து அங்கு சிகிச்சை பெற்று வரும் விநாயகமூர்த்தியின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications