அரசு விரைவு பேருந்துகளில் எக்ஸ்ட்ராவாக 7 சீட்கள்: 100 புதிய பேருந்துகள் அறிமுகம்

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 100 பேருந்துகள் வாங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் முடிந்து படிப்படியாக பேருந்துகள் வருகின்றன. ஏற்கனவே உள்ள அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் மோசமான நிலைமையில் இருப்பதால் அதற்கு பதிலாகத் தான் இந்த புதிய பேருந்துகள் விடப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே உள்ள பேருந்துகளில் 36 இருக்கைகள் தான் உள்ளன. ஆனால் தற்போது வந்து கொண்டிருக்கும் புதிய பேருந்துகளில் கூடுதலாக 7 இருக்கைகள் பொருத்தப்பட்டு மொத்தம் 43 இருக்கைகள் உள்ளன. இதனால் கூடுதலாக 7 பேர் பயணிக்க முடியும்.
புதிய பேருந்துகள் ஏற்கனவே உளள் பேருந்துகளை விட நீளமாக உள்ளன. அதன் நீளம் 12 மீட்டர் ஆகும். இருக்கைகள் அதிகரிக்கப்பட்டதன் மூலம் போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.
பயணிகள் நிம்மதியாக பயணிக்க சொகுசு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன் கூறுகையில்,
அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 100 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. அதில் 25 பேருந்துகள் புதிய வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. ஸ்ரீரங்கம்- திருப்பதி, கடலூர்-திருப்பதி, கடலூர்-திருவனந்தபுரம், கல்பாக்கம்- நாகர்கோவில், சென்னை-வேடச்சந்தூர் உள்ளிட்ட பல புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் கூடுதலாக 7 இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளதன் மூலம் வருவாய் 10 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications