ராமஜெயம் கொலை வழக்கு: தூத்துக்குடி அதிமுக பெண் கவுன்சிலரிடம் தீவிர விசாரணை!

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பியான ராமஜெயம் திருச்சியில் வாக்கிங் சென்றபோது கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
இந்தக் கொலை தொடர்பாக தொடர்ந்து குழப்பமான தகவல்களே வந்தவண்ணம் உள்ளன. பெண் விவகாரத்தில் கொல்லப்பட்டதாக ஒரு தகவலும், ரியல் எஸ்டேட் மோதலில் கொல்லப்பட்டதாக இன்னொரு தகவலும் என பல்வேறு விதமான தகவல்கள் கசிந்தபடி இருந்தன.
கொலையாளிகள் யார் என்பதிலும் கூட ஏகப்பட்ட முரண்பாடுகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் புதியதொரு திருப்பமாக அதிமுக பெண் கவுன்சிலர் ஒருவரை போலீஸார் பிடித்துள்ளனர். அவரை திருச்சிக்குக் கொண்டு வந்து விசாரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
அவரது பெயர் சாந்தி. தூத்துக்குடி மாநகராட்சியின் 9வது வார்டு உறுப்பினராக இருக்கிறார் சாந்தி. இவரை திருச்சி தனிப்படை போலீஸார் திருச்சி அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அதிமுக பெண் கவுன்சிலர் போலீஸ் பிடியில் சிக்கியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சாந்தியுடன் அவரது கணவர் மணிவண்ணனையும் போலீஸார் திருச்சி கொண்டு சென்றுள்ளனர். கொலை நடந்த அன்று முக்கியப் புள்ளி ஒருவரிடம் சாந்தியும், மணிவண்ணனும் நீண்ட நேரம் பேசியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கொலை தொடர்பாகவே இவர்கள் பேசியதாகவும் பரபரப்பா கூறப்படுகிறது. இதையடுத்தே இருவரையும் போலீஸார் பிடித்துச் சென்றுள்ளதாக கூறுகின்றனர். விரைவில் போலீஸ் தரப்பில் இதுகுறித்த முறையான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications