நெல்லையில் விஷம் குடித்த காதலன், தூக்கில் தொங்கிய காதலி
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் காதலர்கள் இருவர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. காதலியின் பெற்றோர் பொய்ப்புகார் கொடுத்ததால் பயந்து போன காதலன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த காதலி தூக்குப் போடு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தை அடுத்த கீழப்பாவூரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். அவருடைய மகன் கதிரேசன் (23). பால் வியாபாரம் செய்து வந்தார். அவர் அதே பகுதி படையாச்சி தெருவைச் சேர்ந்த கணபதி என்பவருடைய மகள் ஜெயலட்சுமியை காதலித்து வந்தார். இவர் கல்லூரி ஒன்றில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
ஜெயலட்சுமி கல்லூரிக்கு சென்று வரும்போது கதிரேசன் அவரை ரகசியமாக சந்தித்து பேசி வந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்தனர்.
பணத்தேவைக்கு சங்கிலி
இந்த நிலையில் கதிரேசன் தொழில் தொடங்குவதற்கு பணம் தேவைப்பட்டது. இது குறித்து ஜெயலட்சுமியிடம் கூறியுள்ளார். இதற்கு தன்னுடைய தங்கச் சங்கிலியை ஜெயலட்சுமி கழற்றிக் கொடுத்து, அதை அடகு வைத்து பணம் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். காதலனிடம் நகையை கொடுத்ததை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்து இருந்தார். ஆனால் கதிரேசனுக்கு நகையை கொடுத்ததை அறிந்த ஜெயலட்சுமியின் பெற்றோர்கள், தனது மகள் கல்லூரிக்குச் சென்றபோது நகையை அபகரித்துக் கொண்டதாக பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் கதிரேசன் மீது புகார் செய்தனர்.
ஒரே நாளில் தற்கொலை
போலீசார் தன்னை தேடுவதை அறிந்து கதிரேசன் போலீசிடம் பிடிபட்டு விடுவோமோ என்று பயந்து கடந்த சனிக்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமியும் விஷம் குடித்தார். பின்னர் எங்கே தன்னை காப்பாற்றி விடுவார்களோ என்று நினைத்து, வீட்டு உத்திரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒரே நாளில் கல்லூரி மாணவியும், அவருடைய காதலரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து சாவில் இணைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாவூர்சத்திரம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications