பன்றிக் காய்ச்சல் நோய் பரிசோதனை: தனியார் ஆய்வகங்களில் கட்டணத்தைக் குறைக்க அரசு உத்தரவு

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பன்றிக் காய்ச்சல் நோய் உள்ளதா என்பதை உறுதி செய்யும் ஆய்வக பரிசோதனைகளை (ஆர்டி-பிசிஆர்) மேற்கொள்ள தமிழக அரசு 12 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தனியார் ஆய்வக உரிமையாளர்களுடன் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர்.வி.எஸ்.விஜய் தலைமையில் சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ரூ3 ஆயிரம் கட்டணம்
இந்தக் கூட்டத்தில், பொதுமக்களின் நலன் கருதி, லாப நோக்கமின்றி பன்றிக் காய்ச்சல் நோய் கண்டறிய தரமான ஆய்வக பரிசோதனையான (ஆர்டி-பிசிஆர்) செய்வதற்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை இருந்த கட்டணத்தை குறைத்து ரூ.3 ஆயிரம் மட்டுமே ஓரே சீரான முறையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வகங்கள் மக்களிடம் கட்டணமாக பெற வேண்டும் என அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் உத்தரவிட்டார். இதை அங்கீகரிக்கப்பட்ட ஆய்வக உரிமையாளர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.
பன்றிக் காய்ச்சல் நோய் குறித்த பரிசோதனை விவரங்களை தினமும் அரசுக்கு உடனுக்குடன் தெரிவிக்க அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை அரசின் கிங் நிலைய ஆய்வகத்தின் மூலமாக தரக் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டு சரியான ஆய்வக பரிசோதனை மேற்கொள்ள கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பொது சுகாதாரத்றை இயக்குநர் டாக்டர் பொற்கைப்பாண்டியன், மருத்துவக்கல்வி இயக்குநர் டாக்டர் வம்சதாரா, கிண்டி கிங் நிலைய இயக்குநர் மற்றும் மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்று அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications