மஹாராஷ்டிராவில் பீகார் தினம்- எதிர்ப்பை மீறி நிதிஷ்குமார் மும்பை பயணம்

பீகார் மாநிலம் உருவாக்கப்பட்ட நாளை பீகார் தினமாக ஏப்ரல் 15-ந் தேதி அம்மாநிலத்தவர் கொண்டாடி வருகின்றனர். மஹாராஷ்டிராவிலும் ஏராளமான பீகாரிகள் வசித்து வருவதால் அங்கும் கொண்டாடப்படுகிறது.
ஆனால் மஹாராஷ்டிர மாநிலத்தில் மஹாராஷ்டிர நாள்தான் கொண்டாடப்பட வேண்டுமே தவிர வேறு மாநிலம் உருவான நாளை கொண்டாட அனுமதிக்க முடியாது என்று ராஜ்தாக்கரேயின் நவநிர்மாண்சேனா எச்சரித்துள்ளது.
2008-ம் ஆண்டு மஹராஷ்டிராவில் நடந்த ரயில்வே தேர்வுக்கு வந்த பீகாரிகளை நவநிர்மாண்சேனா அடித்து வெளியேற்றியதில் ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் மீண்டும் பீகார் தினம் கொண்டாட்டத்துக்கு அந்த அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனிடையே மும்பை, இந்தியாவின் ஒருபகுதிதான். அங்கு செல்வதற்கெல்லாம் விசா எடுக்கத் தேவையில்லை.. என்ன நடந்தாலும் மும்பையில் நடைபெறும் பீகார் தின நிகழ்ச்சியில் கண்டிப்பாக கலந்துகொள்வேன் என்று பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் அதிரடியாக கூறியிருப்பது பதற்றத்தை இருமாநிலங்களிலும் அதிகரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications