சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 32 பகுதிகளுக்கு புதிய குடிநீர்த் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 32 பகுதிகளுக்கு ரூ.700 கோடியில் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சட்டசபையில் உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசுகையில்,

சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வசதியை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மணலி, சின்னசேக்காடு, புழல், நத்தம்பாக்கம், மீனம்பாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி, சோழிங்கநல்லூர், நொளம்பூர், ராமாபுரம், முகலிவாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், ஒக்கியம் -துரைப்பாக்கம்,

மடிப்பாக்கம், மாத்தூர், இடையஞ்சாவடி, சடையன்குப்பம், தீயம்பாக்கம், காரம்பாக்கம், வடபெரும்பாக்கம், சூரப்பட்டு, கதிர்வேடு, புத்தகரம், ஜல்லடம்பேட்டை, செம்மஞ்சேரி, உத்தண்டி, கடப்பாக்கம் மற்றும் மணப்பாக்கம் ஆகிய 32 பகுதிகளுக்கு குடிநீர்த் திட்டம் ரூ.700 கோடியில் செயல்படுத்தப்படும். மேலும், அந்தப் பகுதிகளுக்கு ரூ.1,300 கோடியில் கழிவுநீர் அகற்றும் வசதியும் ஏற்படுத்தப்படும்.

பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஆகிய நீர் ஆதாரங்களில் இருந்து பெறப்படும் குடிநீர், கிருஷ்ணா நீர் உள்ளிட்டவற்றின் நீர் அளவை கண்காணிக்கும் வகையில் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்று வாரிய அலுவலகத்தில் ரூ.2 கோடியில் கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்படும் என்றார் முனுசாமி.

அமைச்சர்-திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம்:

பாதாள சாக்கடை திட்டம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடர்பாக அமைச்சர் கே.பி. முனுசாமிக்கும், திமுக உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் விவரம்:

அமைச்சர் கே.பி. முனுசாமி: கடந்த திமுக ஆட்சியில் 35 நகராட்சிகளில் பாதாள சாக்கடை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. அதில் 18 திட்டங்களுக்கு பணி ஆணையும் வழங்கப்பட்டது. ஆனால், எங்கும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

மு.க. ஸ்டாலின் (திமுக): தொழில்நுட்பப் பிரச்;னைகள் காரணமாகவே திமுக ஆட்சியில் பாதாள சாக்கடை திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. 2001-2006 அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர் பாதாள சாக்கடை திட்டம், திமுக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டது.

கே.பி. முனுசாமி: தஞ்சாவூரில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம் இன்னமும் முடியவில்லை. பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

டாக்டர் சி. விஜயபாஸ்கர் (அதிமுக): கடந்த திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மு.க. ஸ்டாலின் நின்று கொண்டே நிதியுதவி வழங்குவதாகக் கூறி, பெண்களை நீண்ட நேரம் நிற்க வைத்தார்.

கே.பி. முனுசாமி: சுய உதவிக்குழு பெண்களுக்கு சுழல் நிதி கொடுத்தவர்கள், அவர்களின் முன்னேற்றத்துக்காக எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை.

மு.க. ஸ்டாலின்: நின்று கொண்டே சுழல் நிதி கொடுத்ததை ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். பெண்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட சுய உதவிக் குழுக்கள் முறையாகச் செயல்பட திமுக ஆட்சியில் திட்டங்கள் உருவாக்கப்பட்டன என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+