2ஜி தீர்ப்பும் குழப்பங்களும்.. ஜனாதிபதி மூலம் சுப்ரீம் கோர்ட்டிடம் விளக்கம் கோர மத்திய அரசு முடிவு

2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை ரத்து செய்து அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி ஏற்கெனவே மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீதான விசாரணை வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இந் நிலையில் நேற்றிரவு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த கேபினட் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், சல்மான் குர்ஷித், வீரப்ப மொய்லி, ப. சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
122 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது குறித்தும், அந்தத் தீர்ப்பில் திருத்தங்களைக் கோருவது குறித்தும் மத்திய சட்ட அமைச்சகம், அட்டர்னி ஜெனரல், தொலைத்தொடர்பு லைசென்ஸ்களை வழங்குவதில் தொடர்புடைய பல்வேறு அமைச்சகங்கள் அளித்த கருத்துகள் குறித்தும் கேபினட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், எத்தகைய திருத்தங்களைக் கோரலாம், எத்தகைய சந்தேகங்களை எழுப்பலாம் என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு குறிப்பும் தயாரிக்கப்பட்டது.
இந்தக் குறிப்பு குறித்தும், தீர்ப்பின் சாதக பாதக அம்சங்கள் குறித்தும் மத்திய அமைச்சர்கள் விவாதித்தனர். இதையடுத்து லைசென்ஸ்களை ரத்து செய்த தீர்ப்பு குறித்து ஜனாதிபதி மூலம் உச்ச நீதிமன்றத்திடமே தெளிவான விளக்கங்களைக் கேட்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அதனிடம் விளக்கம் கேட்க ஜனாதிபதிக்கு அரசியல் சட்டத்தின் 143வது பிரிவின் கீழ் உரிமையும் அதிகாரமும் உண்டு. இந்த அதிகாரத்தைக் கொண்டு உச்ச நீதிமன்றத்தைக் கேள்வி கேட்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தீர்ப்பினால் பல குழப்பங்கள்.. விளக்கம் கேட்பது ஏன்?:
உச்ச நீதிமன்றம் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக அளித்த தீர்ப்பில், அனைத்து இயற்கை வளங்களையும் ஏலத்தில் விட வேண்டும், அரசின் கொள்கை முடிவுகள் தவறானவை என்று கூறியிருந்தது. தீர்ப்பின்படி, "இயற்கை வளங்களை ஏலத்தில் விட வேண்டும் என்றால் தண்ணீர், காற்று போன்றவையும் இயற்கை வளங்கள்தான். அவற்றை ஏலத்தில் விடுவது நடைமுறையில் சாத்தியமில்லை.
அதே போல ஸ்பெக்ட்ரம் விற்பனை விஷயத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசின் கொள்கை முடிவு தவறு என்றால், 2008ம் ஆண்டில் ஏலமின்றி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள், 1994ம் ஆண்டுக்குப் பிறகு ஏலமின்றி ஒதுக்கப்பட்ட லைசென்ஸ்களின் நிலை என்ன?, பாதிக்கப்பட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்களின் முதலீடுகளை பாதுகாக்க என்ன செய்வது? போன்ற குழப்பங்கள் எழுந்துள்ளன.
மேலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதால் ஏற்படும் சட்ட, நிர்வாக, பொருளாதார சிக்கல்கள் குறித்து ஜனாதிபதியிடம் விளக்கி, அவர் மூலமே தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றத்திடமே தெளிவான விளக்கங்களையும் திருத்தங்களையும் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications