எதிர்கட்சிகளுக்கு மதிப்பில்லை: ஒரு வாரம் சட்டசபையை புறக்கணிக்கும் திமுக

இது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அதிமுக அபரிமிதமான பெரும்பான்மையை வைத்துக் கொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு வாய்ப்பினை தரவில்லை. நியாயமான குற்றச்சாட்டுகளைக் கூட அவையில் எழுப்ப முடியாத அளவுக்கு நடந்துகொள்கிறது. குறிப்பாக திமுக ஆட்சியின் மீது குறிப்பிட்டு எந்தக் குற்றச்சாட்டுகளையும் கூறாமல், பொத்தாம் பொதுவில் அபாண்டமான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசுவதும், அவற்றுக்குப் பதில் கூற திமுக உறுப்பினர்கள் முனைந்தால் அதற்கு அனுமதியும் மறுக்கப்பட்டு வருகிறது.
மேலும், ‘எதற்கெடுத்தாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கூண்டோடு வெளியேற்றுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் அன்றாட செயல்களாகிவிட்டன. திமுக உறுப்பினர்கள் எப்படியும் அவை நடவடிக்கையில் கலந்துகொள்ள வேண்டுமென்பதற்காக அவைக்குச் சென்று வந்த போதிலும், அங்கே பிரச்னைகளைப் பேசுவதற்கோ, ஆளுங்கட்சியினரின் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவோ அனுமதிக்கப்படாத நிலையில் தொடர்ந்து பேரவையில் திமுக உறுப்பினர்கள் கலந்து கொள்ளத்தான் வேண்டுமா என்பதைப் பற்றி திமுக தலைமை நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை ஆலோசித்தனர். அதில் அடுத்த ஒரு வார காலத்துக்கு அவை நடவடிக்கைகளை அடையாளப் பூர்வமாக புறக்கணிப்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications