அமெரிக்காவில் இந்திய தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் சோதனையில் அது பொய்யான மிரட்டல் என்பது தெரிய வந்துள்ளது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு நேற்று காலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதை எடுத்துப் பேசியபோது மறுமுனையில் பேசிய நபர் தூதரகத்தின் பாத்ரூமில் குண்டு இருப்பதாகக் கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டார். அந்த நேரத்தில் தூதரகத்தில் 130 முதல் 140 பேர் இருந்தனர். உடனே அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
இதனால் பதறிப்போன தூதரக ஊழியர்கள் உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்த உடனே போலீசார் தூதரக அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர். தூதரக அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் குழு சோதனை மேற்கொண்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அது பொய்யான மிரட்டல் என்பது தெரிய வந்தது. தூதரகம் உள்ள பகுதியில் குண்டுகள் ஏதாவது உள்ளதா என்றும் சோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications